சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவரிடம் CID விசாரணை

சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவரிடம் CID விசாரணை

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2022 | 10:18 pm

Colombo (News 1st) 2014 ஆம் ஆண்டு மலேசியாவில் சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட செல்லத்துரை கிருபாகரன் என்பவர் இன்று மீண்டும் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கிளிநொச்சியை சேர்ந்த செல்லத்துரை கிருபாகரன் கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டு, பின்னர் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், அவர் இன்று மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கையெழுத்து வேட்டைகள் நடத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில், பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக தன்னை விசாரணைக்கு அழைப்பது வேதனையளிப்பதாக செல்லத்துரை கிருபாகரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்