இலங்கை தூதுக்குழுவினர் மிச்செல் பெச்சலட்டுடன் இன்று (02) கலந்துரையாடவுள்ளனர்

இலங்கை தூதுக்குழுவினர் மிச்செல் பெச்சலட்டுடன் இன்று (02) கலந்துரையாடவுள்ளனர்

இலங்கை தூதுக்குழுவினர் மிச்செல் பெச்சலட்டுடன் இன்று (02) கலந்துரையாடவுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2022 | 3:23 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவினர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை (Michelle Bachelet) இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஜெனிவாவிற்கு சென்றுள்ள வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் பல்வேறு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

உறுப்பு நாடுகளின் வௌிவிகார அமைச்சர்கள் மற்றும் தூதுவர்களை தாம் சந்தித்து வருவதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

இலங்கை தூதுக்குழுவினர் நேற்றைய தினம் (01) பிரித்தானியாவின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் , தென் ஆபிரிக்க வௌிவிவகார அமைச்சர் மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் விவகாரங்களை உள்ளக பொறிமுறையூடாக தீர்ப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தாம் சர்வதேச நாடுகளிடம் எடுத்துக்கூறி வருவதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்