1.8 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

1.8 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

1.8 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2022 | 3:24 pm

 

Colombo (News 1st) பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் 8 மாதங்களுக்கான 1.8 மில்லியன் பீப்பாய் பெட்ரோலை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி நடவடிக்கைகளுக்காக நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் பொருட்டு, பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிக பதிவுகளை பெற்ற விநியோகத்தர்களிடம் முறிகள் கோரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஐக்கிய அரபு இராச்சியத்தின் M/S OQ Trading Limited நிறுவனத்திடம் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்