மசகு எண்ணெய் இறக்குமதிக்கு கனடா தடை

ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு கனடா தடை

by Staff Writer 01-03-2022 | 10:16 AM
Colombo (News 1st) ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய்க்கு கனடா தடை விதித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செயற்பாடுகளுக்கு மசகு எண்ணெயின் மூலம் கிடைக்கும் வருமானம் வழிவகுக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்நாட்டு தரவுகளின் பிரகாரம், கனேடிய அரசாங்கம் கடந்த வருடத்தில் 170 மில்லியன் யூரோ பெறுமதியான வலுசக்தி உற்பத்திகளை இறக்குமதி செய்துள்ளது.