மரக்கிளை வீழ்ந்ததில் ஆசிரியர் மரணம்: சந்தேகநபர்களுக்கு பிணை

மரக்கிளை வீழ்ந்ததில் ஆசிரியர் மரணம்: சந்தேகநபர்களுக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

01 Mar, 2022 | 8:06 am

Colombo (News 1st) தலவாக்கலை – லோகி தோட்ட சந்தியில் இருந்த பாரிய மரமொன்றை வெட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 06 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஜீ.ஜீ. பிரதீப ஜெயசிங்க முன்னிலையில் நேற்று(28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை மற்றும் 15,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாட்சியாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் விடுக்கக்கூடாது என சந்தேகநபர்களுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்