தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

by Staff Writer 28-02-2022 | 7:10 PM
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று(28)  திறந்து வைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்