by Staff Writer 27-02-2022 | 5:45 PM
Colombo (News 1st) அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெரசிட்டமோல் (Paracetamol)மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.