சுற்றுலாப் பயணிகளுக்கான PCR தொடர்பான அறிவித்தல்

சுற்றுலாப் பயணிகளுக்கான PCR தொடர்பான அறிவித்தல்

சுற்றுலாப் பயணிகளுக்கான PCR தொடர்பான அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2022 | 2:48 pm

Colombo (News 1st) முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று, வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் PCR அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசிகளை பெற்று 02 வாரங்கள் நிறைவடைந்த சுற்றுலாப் பயணிகள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

08 வயது அல்லது அதற்கு குறைந்த சிறார்கள், ஒரு தடுப்பூசியேனும் ஏற்றியிருப்பின் அது முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டதாக கருதப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்காவிடின், நாட்டிற்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலத்திற்குள் பெற்றுக்கொண்ட PCR அறிக்கையை சமர்பிப்பது கட்டாயமானது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்