மின் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

மின் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

மின் கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2022 | 5:02 pm

Colombo (News 1st) மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், மின் உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளதால், அதனை சமப்படுத்தும் நோக்குடன் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் யோசனை முன்வைத்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.

இந்த யோசனைத் திட்டத்தை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினூடாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது ஒரு மின் அலகிற்கு 16 ரூபா அறவிடப்படுகிறது.

எனினும், ஒரு அலகு மின்னுற்பத்திற்கு அதனை விட அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்