பன்வில தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்

பன்வில தேயிலை தொழிற்சாலையில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2022 | 8:13 pm

Colombo (News 1st) கண்டி – பன்வில, ரக்ஸாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவியதால் தொழிற்சாலைக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று (26) பிற்பகல் 2.45 முதல் ரக்ஸாவ தேயிலை தொழிற்சாலையில் தீ பரவ ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் தேயிலை தொழிற்சாலையின் உபகரணங்கள் மற்றும் பொருட்களுக்கு ​சேதம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்