English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
26 Feb, 2022 | 7:40 pm
Colombo (News 1st) தேவையேற்பட்டால் விசேட சட்டங்களை கொண்டு வந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உறுதிப்படுத்துவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களின் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில், நாட்டின் பெருந்தோட்டக் கொள்கை மாற்றமடைய வேண்டும் எனவும் முதலாளிகளுக்கு மாத்திரமன்றி தொழிலாளர்களுக்கும் 4 அல்லது 5 ஏக்கரை ஒதுக்கி அதன் மூலம் கிடைக்கும் கொழுந்தினை தொழிற்சாலைக்கு வழங்கும் நடைமுறை அவசியம் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்யாவிட்டால் பெருந்தோட்டங்களை பாதுகாப்பது சிரமமாக அமைந்துவிடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
1000 ரூபா சம்பள பிரச்சினையின் போது, அதனை பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களால் முடியாமற்போனது. தொழிற்சங்கங்கள் பிரிந்து காணப்படுகின்றமையே இதற்கான காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறினார்.
தொழிற்சங்கங்களிடையே காணப்படும் வேற்றுமைகளால் தொழிலாளர்கள் நிர்கதியாகியுள்ள நிலையில், முதலாளிமார் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க தொழில் அமைச்சராலோ அரசாங்கத்தலோ முடியாது. இன்று 85 வீதமான தோட்டங்களில் 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. கிடைக்காத இடங்களும் உள்ளன. தற்போதுள்ள வழக்கு காரணமாக அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளது. எனினும், தொழிலாளர்களுக்கான உரிய பிரதிபலன்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். தேவை ஏற்பட்டால் விசேட சட்டம் ஒன்றையாவது பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சம்பளத்தை உறுதிப்படுத்துவோம்
என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
ஹட்டனில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவற்றைக் கூறினார்.
டன்பார் தொழில் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
06 Jul, 2022 | 02:21 PM
10 Mar, 2022 | 08:45 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS