Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வடமராட்சி, பொலிகண்டி கடற்கரையில் இன்று (25) காலை படகுப்பாதையொன்று கரையொதுங்கியுள்ளது.
பொலிகண்டி கடற்கரையில் கனரக பொருட்களை கொண்டு செல்லும் படகுப்பாதை கரையொதுங்கியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
குறித்த படகுப்பாதை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
