by Staff Writer 25-02-2022 | 4:22 PM
Colombo (News 1st) மத்துகமயில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பாலிகா வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் கடந்த 15 ஆம் திகதி நுழைந்த அடையாளந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மத்துகம பகுதியை சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர், நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த பெண் நுகேகொடையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கொலைக்கான நிதியுதவியை வழங்கியமை, கொலைக்கு திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.