உக்ரைன் வன்முறைகள் கவலையளிப்பதாக இலங்கை அறிக்கை

உக்ரைன் வன்முறைகள் அதிகரிப்பது தொடர்பில் கவலையடைவதாக இலங்கை அறிக்கை

by Bella Dalima 25-02-2022 | 3:25 PM
Colombo (News 1st) ரஷ்யா - உக்ரைனுக்கிடையிலான மோதல் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பல சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், உக்ரைனில் வன்முறைகள் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலையடைவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினூடாக வௌிவிவகார அமைச்சு இந்த விடயத்தைக் கூறியுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நிதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் பகைமையை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவர வேண்டுமெனவும் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பினரிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இராஜதந்திர ரீதியிலும் நேர்மையான கலந்துரையாடல்கள் மூலமாகவும் பதற்றத்தை தணிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.