தமிழ் கைதிகள் இருவரின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

by Staff Writer 25-02-2022 | 3:46 PM
Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த கைதிகள் 23 ஆம் திகதி முதல் உணவை புறக்கணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதனிடையே, கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களால், வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.