by Staff Writer 24-02-2022 | 4:50 PM
Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) உள்ளிட்ட சட்ட ரீதியிலான கொடுப்பனவுகளை செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000-இற்கும் அதிகமான வழக்குகளை தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்தது.
இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் காணப்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக, தொழில் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுவதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.