EPF/ETF ​வழங்காதவர்களுக்கு எதிராக வழக்கு

EPF/ETF ​செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000 வழக்குகளை தொடர நடவடிக்கை

by Staff Writer 24-02-2022 | 4:50 PM
Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) உள்ளிட்ட சட்ட ரீதியிலான கொடுப்பனவுகளை செலுத்தாத சேவை வழங்குநர்களுக்கு எதிராக 15,000-இற்கும் அதிகமான வழக்குகளை தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்தது. இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகளில் காணப்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக, தொழில் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புதிய சட்டமூலம் தயாரிக்கப்படுவதாகவும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்