by Staff Writer 24-02-2022 | 7:37 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (24) இரத்மலானை ரயில்வே இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியுடன் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரும் இரத்மலானை ரயில்வே இயந்திர பொறியியல் தொழிற்சாலைக்கு சென்றிருந்தனர்.
தொழிற்சாலை வளாகத்தில் பயன்படுத்தாமல் குவிக்கப்பட்டுள்ள 6700 தொன் கழிவுப்பொருட்களை ஏலத்தில் விட்டு அதன் வருமானத்தை ஊழியர்களின் தேவைகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொழிற்சாலையின் பல பகுதிகளுக்கும் சென்ற ஜனாதிபதி, அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி இதன்போது போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.