நாளை (25) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

நாளை (25) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

by Staff Writer 24-02-2022 | 7:58 PM
Colombo (News 1st) நாளை (25) 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A, B, C வலயங்களில் 4 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஏனைய வலயங்களில் 5 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொழும்பு 1 தொடக்கம் 15 வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான திட்டம் எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.