புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

24 Feb, 2022 | 12:17 pm

Colombo (News 1st) புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன்(24) நிறைவடைகின்றது.

இன்று(24) நண்பகல் 12 மணியுடன் கால அவகாசம் நிறைவடைவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படும் விசேட குழுவினூடாக சோதனைக்குட்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டவற்றில் தகமைகளை பூரணப்படுத்தும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள அரசியல் கட்சிகளை விசேட மாநாட்டில் ஆய்வுக்குட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டில் இதுவரை 79 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்