ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை 28 ஆம் திகதி ஆரம்பம்

விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை பெப்ரவரி 28 ஆரம்பம் 

by Staff Writer 23-02-2022 | 4:56 PM
Colombo (News 1st) ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் அதன் செயலாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்தில் இந்த சாட்சி விசாரணை இடம்பெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு சாட்சி விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.