by Staff Writer 23-02-2022 | 4:48 PM
Colombo (News 1st) கொழும்பு 01 - 15 வரையான பகுதிகளில் நாளை (24) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.
எனினும், கொழும்பு 01 - 15 வரையான பகுதிகளில் மின்வெட்டை அமுல்படுத்த இன்று தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது.