கொரோனா பரிசோதனை கட்டாயம்

கொரோனா பரிசோதனை கட்டாயம் - ஹொங்கொங் அரசு உத்தரவு

by Staff Writer 23-02-2022 | 12:17 PM
Colombo (News 1st) கொரோனா பரிசோதனையை ஹொங்கொங் அரசாங்கம் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து பிரஜைகள் அனைவரும் 03 கட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமென ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கெரி லேம் (Carrie Lam) தெரிவித்துள்ளார். சீனாவின் "பூஜ்ஜிய கொவிட்" கொள்கையை ஹொங்கொங்கும் கடைப்பிடிக்க முயல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், மிக வேகமாக பரவக்கூடிய ஒமெக்ரோன் தொற்றினால் அந்நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்புகளும் தனிமைப்படுத்தலுக்கான வசதிகளும் பாதிப்படைந்துள்ளன. உலகின் ஏனைய பகுதிகள் இந்த தொற்றுடன் வாழ கற்றுக்கொண்டாலும், ஆரம்பகால சோதனை, விரிவான தொடர்புத் தடமறிதல், கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் மூலம் தொற்றுநோயை ஒழிக்க முயற்சிப்பதே சீனா கையாளும் முறைகளாக காணப்படுகின்றன.