கால்நடைகளுக்காக கோதுமை இறக்குமதி செய்ய அனுமதி

கால்நடைகளுக்காக கோதுமை இறக்குமதி செய்ய அனுமதி

by Staff Writer 23-02-2022 | 3:31 PM
Colombo (News 1st) கால்நடை வளர்ப்பை மேம்படுத்தும் நோக்கில் மேலும் ஒரு மெட்ரிக் தொன் கோதுமையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி மற்றும் பால் சார்ந்த உற்பத்தி இராஜாங்க அமைச்சர் D. B.ஹேரத் தெரிவித்தார். இதற்கு முன்னர் 40,000 மெட்ரிக் தொன் கோதுமையை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த கோதுமை தொகையில் பெரும்பாலானவை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொகையில் 8000 மெட்ரிக் தொன் விரைவில் நாட்டை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.