அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: பசில் தெரிவிப்பு 

by Staff Writer 23-02-2022 | 7:15 PM
Colombo (News 1st) அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற, அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவூட்டும் அரச அதிகாரிகளுடனான விசேட சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் முறையாக பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதற்காக ஆளுநர்கள், அமைச்சு, மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் தனிப்பட்ட ரீதியில் தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கடமைகளை நிறைவேற்றும் பொழுது மத்திய, அரச மற்றும் மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் ஒரே அரச கொள்கையின் கீழ் செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.