யாழ். சிறையில் கைதிகள் இருவர் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ். சிறையில் கைதிகள் இருவர் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ். சிறையில் கைதிகள் இருவர் உணவு தவிர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Feb, 2022 | 5:15 pm

Colombo (News 1st) யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவர் இன்று (23) காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

இதனிடையே, கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கைதிகளின் உறவினர்களும் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இவர்களுக்கு வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்