by Staff Writer 23-02-2022 | 1:50 PM
Colombo (News 1st) அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன முறையிலான முன்பள்ளி நேற்று(22) திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் பிரதே சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹீர் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்பள்ளி திறப்பு விழாவுக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். மணிவண்ணன் பிரதம அதிதியாக கலந்து பள்ளியைத் திறந்து வைத்தார்.
உள்ளூராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தின் கீழ் 69 இலட்சத்து 34ஆயிரத்து 526 நிதி ஒதுக்கீட்டில் முன்பள்ளியின் முதற்கட்ட வேலை நிறைவடைந்துள்ளது.
விழாவை முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் அலங்கரித்தன.