200 பழுதடைந்த பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் இணைப்பு

by Staff Writer 22-02-2022 | 7:42 PM
Colombo (News 1st) பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 200 பஸ்களை புதுப்பித்து சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று (22) நடைபெற்றது. வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பஸ் தட்டுப்பாட்டிற்கு தீர்வாகவும் அந்நிய செலாவணியை சேமிக்கும் வகையிலும் பழுதடைந்த பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் இணைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள 107 டிப்போக்களில் பயன்பாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட்ட 200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீ லங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக 136 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சில பஸ்களின் தரத்தை கண்காணித்த ஜனாதிபதி, போக்குவரத்து சபை ஊழியர்களுடன் கலந்துரையாடினார். நாடளாவிய ரீதியிலுள்ள டிப்போக்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் காலி முகத்திடலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னதாக அந்த பஸ்களை கண்காணித்தனர். பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 200 பஸ்களை புதுப்பித்து சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இன்று (22) நடைபெற்றது. வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பஸ் தட்டுப்பாட்டிற்கு தீர்வாகவும் அந்நிய செலாவணியை சேமிக்கும் வகையிலும் பழுதடைந்த பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் இணைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள 107 டிப்போக்களில் பயன்பாட்டிலிருந்து முற்றாக நீக்கப்பட்ட 200 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஶ்ரீ லங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக 136 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சில பஸ்களின் தரத்தை கண்காணித்த ஜனாதிபதி, போக்குவரத்து சபை ஊழியர்களுடன் கலந்துரையாடினார். நாடளாவிய ரீதியிலுள்ள டிப்போக்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த புதுப்பிக்கப்பட்ட பஸ்கள் காலி முகத்திடலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னதாக அந்த பஸ்களை கண்காணித்தனர்.