யாழில் 72 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்பு 

யாழில் 72 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்பு 

யாழில் 72 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்பு 

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2022 | 4:05 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

72 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்ட வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அருகிலே இன்று பிற்பகல்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமைய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்