தொல்பொருள் கற்களை கடத்த முயன்ற 10 பேர் முல்லைத்தீவில் கைது

by Staff Writer 22-02-2022 | 6:08 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து தொல்பொருள் கற்களை கடத்த முயன்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை வவுனியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். தண்ணிமுறிப்பு குளத்திற்கு அருகில் இருந்து இந்த கற்கள் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்