கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களின் கோரிக்கை

கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களின் கோரிக்கை

கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களின் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2022 | 3:59 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மூடப்பட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – பிட்டிபனயில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பீடம் மீள திறக்கப்படாமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Online ஊடாக விரிவுரைகள் நடத்தப்பட்ட போதிலும் அனைத்து பிரயோக பரீட்சைகள் மற்றும் ஏனைய பரீட்சைகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான்காம் கல்வி ஆண்டு மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்ய அதிக காலம் செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட பேராசிரியர் சுமேத ஜயநெத்தியிடம் வினவியபோது, மாணவர்களின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, விரைவில் பொது மற்றும் பிரயோக பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட பேராசிரியர் சுமேத ஜயநெத்தி கூறினார்.

கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளுக்கமைவாக, விடுதிகளில் 50 வீதமான மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டமை தற்போதைய சிக்கலுக்கான காரணமென அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பிலும் உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்