''நாளை(21) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு''

நாளை(21) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல் - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

by Staff Writer 20-02-2022 | 10:15 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் நாளை (21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், நாளை (21) காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். இதனிடையே, தென் மாகாணத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியால மின்வெட்டு அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.