கிராம சேவகர்களுக்கான 9,000 வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் கிராம சேவகர்களுக்கான 9,000 வெற்றிடங்கள்

by Staff Writer 20-02-2022 | 3:10 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 9,000 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல கிராம சேவையாளர் பிரிவுகளுக்கான பணிகளை ஒரு உத்தியோகத்தர் மாத்திரமே ஆற்றவேண்டியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. எனினும், இதுவரை நேர்முகப் பரீட்சை இடம்பெறவில்லை. பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக வேலைப்பளுவில் உள்ளதால் நேர்முகப் பரீட்சைக்கான திகதியொன்றை ஒதுக்க முடியாதுபோனதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த கூறியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் இதற்கான திகதியை ஒதுக்கி நேர்முகப் பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.