by Staff Writer 20-02-2022 | 5:01 PM
Colombo (News 1st) திட்டமிட்டவாறு இன்றும் (20) மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விடுமுறை நாளில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடையுமென தாம் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் பாவனையை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையில் இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.