by Staff Writer 20-02-2022 | 2:36 PM
Colombo (News 1st) எரிபொருளை ஏற்றிய 05 கப்பல்கள் இன்று (20) முதல் எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்களினூடாக டீசல், பெட்ரோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் என்பன கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாட்டில் போதுமான எரிபொருள் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை வழங்கவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதற்கான கட்டணத்தை மின்சார சபை செலுத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாளாந்த எரிபொருளுக்கான கேள்வி மிக வேகமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் நாளாந்தம் 6,000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவையே காணப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (19), 9,000 மெட்ரிக் தொன் வரை அதிகரித்ததாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.