இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு கொரோனா தொற்று

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு கொரோனா தொற்று

by Staff Writer 20-02-2022 | 8:07 PM
Colombo (News 1st) பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு COVID - 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக Buckingham அரண்மனை தெரிவித்துள்ளது. தடிமனுக்குரிய இலேசான நோய் அறிகுறிகள் மகாராணியிடம் தென்படுவதாக அரண்மனை கூறியுள்ளது. தொடர்ச்சியாக அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பாரெனவும் பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவாரெனவும் Buckingham அரண்மனை அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.