இந்திய டெஸ்ட் அணி தலைவராக ரோகித் நியமனம்

இந்திய டெஸ்ட் அணி தலைவராக ரோகித் நியமனம்; இலங்கைக்கு எதிரான குழாம் அறிவிப்பு

by Bella Dalima 19-02-2022 | 5:53 PM
Colombo (News 1st) இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில், புதிய தலைவராக ரோகித் சர்மாவை BCCI நியமித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததையடுத்து, விராட் கோலி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, அடுத்த மாதம் இலங்கை அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், ரோகித் சர்மாவை புதிய டெஸ்ட் அணியின் தலைவராக BCCI இன்று அறிவித்துள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் T20 அணியின் தலைவராக இருந்த நிலையில், தற்போது 3 வடிவிலான அணியிலும் அவர் தலைவராக பணியாற்றுவார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்ட்கள், 3 T20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா (தலைவர்), மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ். பரத், அஸ்வின் (உடற்தகுதியின் அடிப்படையில்), ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா (துணை தலைவர்), ஷமி, ஷிராஜ், உமேஷ் யாதவ், செளரப் குமார்.