இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

by Staff Writer 19-02-2022 | 4:01 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் வலுவான மேகக் கூட்டங்கள் உருவாகியுள்ளதால் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் , மாத்தளை பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளுக்கு மேலாக உருவாகியுள்ள முகில்கூட்டங்களால், திருகோணமலை தொடக்கம் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலலைகளின் வேகம் அதிகரிப்பதுடன், அலை உயரமும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் போது, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.