கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

by Staff Writer 19-02-2022 | 7:34 PM
Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. விளையாட்டுப் பிரிவில் உள்ள பிரச்சினைகள், தொழில்நுட்ப பீடத்தில் காணப்படும் பிரச்சினைகள், சிற்றுண்டிச்சாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கோரியும் பல்கலைக்கழகத்தை முழுமையாக மீள திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று செங்கலடி பிரதான சந்தியை முற்றுகையிட்டு, வலுப்பெற்றது. ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மட்டக்களப்பு - செங்கலடி பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.