125 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன

தேசிய பாடசாலைகளாக 125 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன

by Staff Writer 18-02-2022 | 4:12 PM
Colombo (News 1st) மேலும் 125 பாடசாலைகளை எதிர்வரும் 02 மாதங்களில் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எந்தவொரு தேசிய பாடசாலையும் இல்லாத 125 பிரதேச செயலக பிரிவுகளில், தலா ஒரு பாடசாலை வீதம் தேசிய பாடசாலை தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளதாக அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிறி லியனகம குறிப்பிட்டார். ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 831 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலைகளை இவ்வருட இறுதிக்குள் கட்டங்கட்டமாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 09 மாகாணங்களிலும் 09 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கித்சிறி லியனகம கூறினார். வசதிகளுடன் கூடிய கற்றலுக்கான சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமென அவர் மேலும் தெரிவித்தார்