by Staff Writer 18-02-2022 | 3:31 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெத்திகே,மொஹமட் இஷடீன் உள்ளிட்ட மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த இருவரையும் விடுதலை செய்யுமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதி தரப்பு சாட்சியம் அழைக்கப்படாது, நீதிபதிகள் குழாமின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் பொலிஸ்மாஅதிபரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தலா 855 குற்றச்சாட்டுகளின் கீழ், மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.