பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

by Staff Writer 17-02-2022 | 8:50 PM
Colombo (News 1st) சம்பளக் கொள்கையை மீறி தீர்மானம் எடுப்பதாகக் குற்றஞ்சாட்டி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பிற்கு தயாராகி வருகின்றது. எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க தயாராவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய சபை உறுப்பினர், மருத்துவர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டார். சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் அதனை அரச கொள்கைக்கு அமையவே மேற்கொள்ள வேண்டும். எனினும், தற்போது அமைச்சரவைப்பத்திரம் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது நாயின் வேலையை கழுதை மேற்கொள்வதைப் போன்றது என அவர் சுட்டிக்காட்டினார்.