by Staff Writer 17-02-2022 | 8:12 PM
Colombo (News 1st) அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று சென்றிருந்தார்.
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கும் பொருட்டே அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 3 மணித்தியாலங்கள் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அதை சட்டமா அதிபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்தார்.