பொலிஸ் விசாரணைப் பிரிவில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய ரஞ்சன் ராமநாயக்க

பொலிஸ் விசாரணைப் பிரிவில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய ரஞ்சன் ராமநாயக்க

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2022 | 8:34 pm

Colombo (News 1st) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று காலை 9.30 அளவில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜராகியிருந்தார்.

பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்துவரப்பட்டிருந்தார்.

6 முறைப்பாடுகளின் பிரதிவாதியாக ரஞ்சன் ராமநாயக்க இன்று அழைக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 4 மணித்தியாலங்கள் அவர் பொலிஸ் விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்