நிர்ணய விலையில் மஞ்சள் கிழங்கு கொள்முதல்

நிர்ணய விலையில் மஞ்சள் கிழங்கு கொள்முதல்

by Staff Writer 17-02-2022 | 4:13 PM
Colombo (News 1st) நாடு முழுவதுமுள்ள மஞ்சள் செய்கையாளர்களிடமிருந்து நிர்ணய விலையில் மஞ்சள் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாய திணைக்களம் மற்றும் இலங்கை வாசனைத் திரவியங்கள் சந்தைப்படுத்தல் சபை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை கம்பஹா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட செய்கையாளர்களிடமிருந்து ஒரு இலட்சம் கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மஞ்சள் கிழங்கு 165 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாக கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.