PCR பரிசோதனைக்கு விசேட சுற்றுநிருபம்

by Staff Writer 16-02-2022 | 12:40 PM
Colombo (News 1st) வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போதும் PCR பரிசோதனை அவசியமில்லை என அறிவித்து சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி (Judicial Medical Officer) பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.