உரமின்மையால் திராட்சை செய்கை பாதிப்பு

உரமின்மையால் திராட்சை செய்கை பாதிப்பு

by Staff Writer 16-02-2022 | 4:04 PM
Colombo (News 1st) உரமின்மை காரணமாக தமது விளைச்சல் குறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட திராட்சை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இளவாலை, வலிகாமம் வடக்கு, புன்னாலைக்கட்டுவான் மற்றும் உரும்பிராய் உள்ளிட்ட பிரதேசங்களில் சுமார் 140 ஏக்கர் நிலப்பரப்பில் திராட்டை பயிரிடப்பட்டுள்ளது. எனினும் உரமின்மை, இரசாயன கிருமிநாசினி தட்டுப்பாடு என்பனவற்றால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லையென செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக செய்கையாளர்கள் கூறியுள்ளனர்.