பிரேசிலில் கனமழை: 23 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கனமழை: 23 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கனமழை: 23 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2022 | 4:29 pm

Colombo (News 1st) பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ( Rio de Janeiro) கனமழை மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பிரேசிலில் கனமழை பெய்துவருவதால், பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

கனமழைக்கு 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவின் வடக்கே பெட்ரோபோலிஸ் நகரில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro, பெட்ரோபோலிஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்