அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2022 | 11:54 am

Colombo (News 1st) புனரமைப்புப் பணிகளுக்காக அனுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் பாதை மூடப்படவுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 05 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு ரயில் பாதை மூடப்பட்டதன் பின்னர், யாழ் தேவி மற்றும் இலக்கம் 17 ரயில் பயணிகளுக்காக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ரயில்கள் ஏற்பாடு செய்யப்படுவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பயணிகளின் போக்குவரத்திற்காக அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் குறித்த ரயில் பாதை புனரமைக்கப்படவுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்தின் கீழ் அனுராதபுரம் தொடக்கம் மஹவ வரையான பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்