COVID-19 வைரஸ் பரவல் ஒழியாமல் போகலாம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

COVID-19 வைரஸ் பரவல் ஒழியாமல் போகலாம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

COVID-19 வைரஸ் பரவல் ஒழியாமல் போகலாம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2022 | 4:49 pm

Colombo (News 1st) புதிய வகைகளாக உருமாறுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் உலகில் ஒருபோதும் ஒழியாமல் போகலாம் எனறு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா்.

இது குறித்து அமெரிக்காவின் யேல் மருத்துவ பல்கலைக்கழக நிபுணா்கள்,

வைரஸ்கள் சில மாதங்களுக்கு ஒருமுறை புதிய தன்மைகளுடன் கூடிய அவதாரமெடுத்து தமது பரவலைத் தொடா்ந்து கொண்டுதான் இருக்கும். பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிவிட்டு, அதனை ஏராளமானவா்களுக்கு செலுத்திவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, புதிய வகை கொரோனாக்கள் உருவாவதை நாம் மறந்துவிடக் கூடாது

என்று எச்சரித்துள்ளனா்.

ஒமிக்ரோன் வகை கொரோனா ஏராளமானவா்களுக்குப் பரவி, அதிக உடல்நல பாதிப்பை ஏற்படுத்தாமல் மறைந்து விடுவதால், சமூக நோய்த் தடுப்பாற்றல் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறான கணிப்பு என்று ஹூஸ்டன் மருத்துவக் கல்லூரி நிபுணா்கள் கூறியுள்ளனர்.

எனவே, தற்போதைய சூழலைக் கொண்டு கொரோனா உலகிலிருந்து மறைந்துவிடும் என்று கருதிவிட முடியாது; அலட்சியமாக இருந்தால், அது புதுப் புது உருவங்களில் தொடா்ந்து பரவி ஒருபோதும் அழிக்க முடியாமல் போனாலும் போகலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனா்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்